• Jan 07 2026

Scam பண்ணத பெருமையா சொல்லுறான்... தமிழ்நாடு அரசு முடிவெடுக்கணும்.! முத்துக்குமரன் பகீர்

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டில் சமீப காலங்களில் யூடியூப் மற்றும் ரீல்ஸ் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் புகழ் மற்றும் பணம் சம்பாதிப்பது புதிய தொழிலாக மாறியுள்ளது. பலர் சிறு வயதிலேயே பெரிய பரிமாணத்தில் பிரபலமாகி, லட்சக்கணக்கான மக்களை ஈர்க்கின்றனர். ஆனால் இந்த வரவேற்பு சூழலில், சிலர் தம்முடைய புகழையும் வாய்ப்பையும் தவறாக பயன்படுத்தும் அபாயமும் உருவாகியுள்ளது.


இந்த நிலையில், சிறுவன் கொடுவை அன்பு என்ற 15 வயது பையன் சமீபத்தில் அதிகப் பண மோசடி செய்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கிட்டத்தட்ட 10 லட்சம் சப்ஸ்கிரைப்ஷன்கள் கொண்ட சிறுவன், தனது யூடியூப் வீடியோக்கள் மூலம் சம்பாதித்த பணத்தை வைத்து கார் வாங்கியதாக சமீபத்தில் வெளியான வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது. அதில், தனது தாய்க்கு பரிசாக அந்த காரை கொடுத்த தருணத்தை வீடியோவில் காட்டியுள்ளார். இவ்வளவு சிறுவயதில் 30 லட்சம் மதிப்புள்ள கார் வாங்கி, அதனை தாய்க்கு பரிசாக வழங்கியது பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இந்த சம்பவத்தின் பின்னணியில் உண்மையில் நடந்தது, சிறுவன் “work from home” என்று கூறி பலரிடம் பணம் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. 1,000 ரூபாய் முதலீடு போட்டால் 2,000 ரூபாய் அளவில் பணம் கிடைக்கும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் பணத்தை கொடுத்தவர்களுக்கு அவர் வேலை கொடுக்கவில்லை; அதே நேரத்தில், பணத்தையும் திரும்ப வழங்கவில்லை. மேலும், அவர்கள்  அனுப்பும் மெசேஜ்கள் மற்றும் ஃபோன்கள் அனைத்துக்கும் பதில் அளிக்கவில்லை.

இதன் விளைவாக, சிறுவன் மோசடி செய்துள்ளார். இந்த சம்பவத்தைப் பற்றிய வீடியோக்கள் மற்றும் செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி, பல பிரபலங்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். அதில், பிக்பாஸ் பிரபல முத்துக்குமரன் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.


அவர் கூறியதாவது, “15 வயசு பையனுக்கு எப்படி கார் வாங்க காசு வந்தது? என்ன பண்ணியிருக்கார்னு பாத்தா? Work from home என்று சொல்லி எல்லார்கிட்டயும் காசு வாங்கிட்டு ஏமாத்தி இருக்கார். அதுக்கு விளக்கம் கொடுக்கிற வீடியோவில 'நான் மட்டும் தான் game ப்ரோமோஷன் பண்றேனா, வேற யாரும் பண்ணுறேலயா?' என்று கேட்டதும் சுர்ன்னு வந்திடுச்சு. 

சூதாட்டத்தை promote பண்ணத பெருமையா சொல்லுறான். தமிழ் நாடு காவல்துறை ஒரு வாரம் பையனைக் கூட்டிக் கொண்டு போய் இதெல்லாம் பண்ணக் கூடாது என்று அறிவுரை கொடுக்கணும். தம்பிய சொல்லி தப்பு இல்ல... 15 வயது பையனுக்கு scam பண்ற அளவுக்கு துணிச்சல நாம தான் கொடுத்திருக்கோம்.”

முத்துக்குமரன் இதன் மூலம், சிறுவர்களை தவறான பண மோசடிகளில் ஈடுபடுத்துவதும், சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதும் ஒரு பெரிய அபாயம் எனவும், காவல்துறையும் பெற்றோர்களும் இதற்கான விழிப்புணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement