பிக் பாஸ் 9வது சீசனில் கார் டாஸ்க் சான்ட்ராவை கீழே தள்ளியதன் காரணமாக விஜே பார்வதியும் கமருதீனும் ரெட் கார்ட் பெற்று வெளியேறினார்கள். பிக் பாஸ் வரலாற்றிலேயே பெண் போட்டியாளர் ஒருவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டது இதுவே முதல் முறையாக பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில் விஜே பார்வதி டைட்டில் அடிப்பார் என கருதப்பட்டது. ஆனால் சமீபத்தில் இடம்பெற்ற கார் டாஸ்க்கில் சான்ட்ராவை எட்டி உதைத்தார் பார்வதி. அதற்கு கமருதீனும் ஆதரவு தெரிவித்தார்.
இதை பார்த்து கொதித்தெழுந்த பிக் பாஸ் ரசிகர்கள் அனைவருமே செய்யாத தப்புக்கு பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுத்தார்கள். ஆனால் இவ்வளவு வன்மத்தோடும் அராஜகத்தோடும் நடந்து கொண்ட பார்வதிக்கும் கமருதீனுக்கும் ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதை அடுத்து விஜய் சேதுபதியும் அதிரடியாக அவர்கள் இரண்டு பேருக்கும் ரெட் கார்ட் கொடுத்து வழி அனுப்பினார். பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து அவர்கள் இருவரும் சான்றாவிடம் மன்னிப்பு கேட்டார்கள் இறங்கி வந்து சான்ட்ராவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு வீட்டில் இருந்து வெளியேறினார்கள்.

இன்னொரு பக்கம் ஆரம்பத்தில் பார்வதிக்கு சபரி கண்ணில் தாக்கினார். அதன் பின்பு அதை வேண்டும் என்று தான் செய்ததாகவும் ஒப்புக்கொண்டார். இதன்போது சபரிக்கு ரெட் கார்ட் கொடுக்கவில்லை. அந்த விடயத்தை பெரிதாக்கவில்லை. அதை கேமாக மட்டும் தான் பார்த்தார்கள்.
அதற்குப் பிறகும் பார்வதியை பல சந்தர்ப்பங்களில் தாக்கியுள்ளார்கள். இறுதியாக கூட ஆறு பேர் சேர்ந்து அவரை நசுக்கி எடுத்திருந்தனர். இதன்போது கூட யாரும் குரல் கொடுக்கவில்லை. ஆனால் சான்ட்ரா நடிக்கின்றார். கேம் ஆடுகின்றார். அவர் நினைத்ததை சாதித்து விட்டார் என்று பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பிக் பாஸில் இருந்து வெளியேறிய பார்வதியின் ரியாக்சன் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்பட்டது. இதனால் அவருடைய இன்ஸ்டாகிராமை பார்த்தபோது வரிசையாக பல ஸ்டோரிகள் வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பிக் பாஸ் 9ஐ ஆண்ட அரசி விஜே பார்வதி தான். பிக் பாஸ் 9 சீசனில் இதுவரை வெளியான 320 ப்ரோமோக்களில் 220 ப்ரோமோக்கள் பார்வதி சம்பந்தமாக இருந்துள்ளதால் அவர்தான் இந்த சீசனை ஆண்ட அரசி என்றும், அவர்தான் உண்மையான வெற்றியாளர் எனவும் குறிப்பிட்டு இருந்த போஸ்டர்களையும் விஜே பார்வதி பகிர்ந்து உள்ளார்.
Listen News!