பிக் பாஸ் 9ல் போட்டியாளராக கலந்து கொண்டு இறுதிவரை முன்னேறிய கமருதீன், பார்வதியின் கூட்டணியால் ரெட் கார்ட் பெற்று வெளியிடப்பட்டார். தற்போது இவர் பரிதாபத்துக்குரியவராக பலராலும் பார்க்கப்பட்டு வருகின்றார்.
இந்த நிலையில், நீயா நானா நிகழ்ச்சியில் ஜோதிடர்கள் பங்கேற்றபோது அதில் கமருதீனும் கலந்து கொண்டுள்ளார் .இதன் போது அவருக்கு என்ன நடக்கும் என ஜோதிடர்கள் கூறியபடியே தற்போது அனைத்தும் நடந்து விட்டதாக சமூக வலைதள பக்கங்களில் வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகின்றது.
அதாவது கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் சிம்ம ராசிக்கு என்ன நடக்கும் என்ற விவாதம் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற கமருதீன் திருமணம் செய்து கொள்வது நல்லதா? கெட்டதா? அதற்கு ஒரு பதில் வேண்டும் என கூறியுள்ளார். இதன்போது அஷ்டம சனி வரப்போகுது. மனநிலை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இதனால் வேலையில் பாதிப்பு, நண்பர்களுடன் பிரச்சனை, கூட்டு சேர்க்கையால் ஏமாற்றம், இழப்பு என ஒரு ஜோதிடர் கூறினார்.

மேலும் சில அவமானங்கள் வரலாம். பழகும் போது வார்த்தைகளை ரொம்ப ஜாக்கிரதையாக பயன்படுத்த வேண்டும். முக்கியமா இப்போ லவ் பண்ணவே கூடாது என்று இன்னுமொரு ஜோதிடர் கூறியுள்ளார்.
அத்துடன் சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாட்டில் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று இன்னும் ஒரு ஜோதிடர் எச்சரித்துள்ளார். தற்போது அந்த நிகழ்ச்சியில் ஜோதிடர்கள் கணித்தது போலவே கமருதீனுக்கு அனைத்தும் நடந்து விட்டது என குறித்த வீடியோவை பகிர்ந்து வருகின்றார்கள்.
Listen News!