இளையதளபதி விஜய் நடிப்பில் இறுதியாக கோட் படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் வசூல் ரீதியாக 450 கோடிகளை புரட்டி இருந்தது. அத்துடன் கோட் படம் ரிலீசாக முன்பே தமக்கு லாபம் ஈட்டி தந்ததாக தயாரிப்பாளரும் தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து எச், வினோத் இயக்கும் தனது 69 ஆவது படத்தில் நடித்து வருகின்றார் விஜய். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பிரியாமணி, மமீதா பைஜூ மற்றும் பாலிவுட் நடிகரான பாபி தியோல் ஆகியோர் நடித்து வருகின்றார்கள். இதனால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்து உள்ளது.
அரசியலில் கால் பதித்துள்ள விஜய் நடிக்கும் இறுதி படம் இது என கூறப்பட்டது. இந்த காரணத்தினால் தளபதி 69 ஆவது படம் விஜய்யின் அரசியலை பற்றி பேசும் படமாக தான் இருக்கும் என அதிக அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தளபதி 69 படத்திற்கான புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் இந்த படத்திற்கான ஷூட்டிங் அடுத்த வாரம் சென்னையில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் தளபதி 69 படத்திற்கான மொத்த சூட்டிங்கும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடையும் எனவும் கூறப்படுகிறது.
தற்போது விஜய் படப்பிடிப்புகளில் மட்டுமில்லாமல் அரசியல் சார்ந்த நிகழ்வுகளிலும் பிஸியாக பயணித்து வருகின்றார். மேலும் விஜய் அரசியலில் பயணித்தாலும் ஒன்று, இரண்டு படங்களில் என்றாலும் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!