பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா சினிமாத்துறையில் தற்போது ட்ரெண்டிங்கில் இருப்பவர். இவரின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்கள் மாபெரும் ஹிட் கொடுத்தது. இந்நிலையில் எப்போதும் தனது புகைப்படங்களை ஷேர் செய்துவரும் ராஷ்மிகா புதுவருடம் தொடங்கிய நிலையில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
ராஷ்மிகா சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜூனுடன் புஷ்பா-2 திரைப்படத்தில் நடித்திருந்தார். இன்றுவரையில் வெற்றிகரமாக வசூலிக்கிறது புஷ்பா-2 . அந்த கொண்டாட்டத்துடன் இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது இன்ஸராகிராம் பக்கத்தில் "மீண்டும் 2025ம் ஆண்டிற்குள் செல்கிறோம். புத்தாண்டு வாழ்த்துக்கள், எல்லோரும் நல்லா இருங்க" என்று பதிவிட்டுள்ளார். அத்தோடு சில புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார்.
நியூ இயர் நேரத்தில் அழகிய கெட்டப்பில் ராஷ்மிகா ரசிகர்களுக்கு தரிசனம் தருவார் என்று எதிர்பார்த்த நிலையில் நார்மலான உடையில் வீட்டில் அமர்ந்திருக்கும் சில புகைப்படங்களையே பகிர்ந்துள்ளார். எதுவானால் என்ன நாங்கள் ரசிக்கிறோம் என ரசிகர்கள் பதிலுக்கு நியூ இயர் வாழ்த்து கூறிவருகிறார்கள். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Listen News!