பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இன்னும் ஒரு சில வாரங்களில் நிறைவுக்கு வரவுள்ளது. தற்போது பிக்பாஸ் வீட்டில் பத்து போட்டியாளர்களே எஞ்சி உள்ளார்கள். இதில் முத்துக்குமரன் ஜாக்குலின், தீபக் மற்றும் அருண் ஆகியோருக்கு இடையே அதிக போட்டி காணப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் டிக்கெட் டு பினாலே ஆரம்பிக்கப்பட்டது. இதில் வெற்றி பெறுபவர்கள் நேரடியாகவே பைனலுக்குள் நுழைவார்கள். இதனால் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் தமது மொத்த உழைப்பையும் கொட்டி டாஸ்க்குகளை நிரப்பி வருகின்றார்கள்.
d_i_a
இதில் முத்துக்குமரன் வெற்றி பெற்றால் நேரடியாகவே பைனலுக்கு செல்வார். இது மஞ்சரிக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமாக காணப்படும். அதற்கு காரணம் முத்துக்குமரனின் ரசிகர்கள் மஞ்சரிக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது. மேலும் மஞ்சரி இறுதியாக இடம்பெற்ற டாஸ்க்கிலும் வெற்றி பெற்றிருந்தார்.
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆன நடிகர் ரஞ்சித் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அவருடைய பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது.
இதன்போது அவர் கூறுகையில், பிக்பாஸ் வீட்டில் அருண் சரியாக நடக்கின்றார்.. அவர்தான் இறுதிப் பைனல் மேடைக்கு தகுதியானவராக காணப்படுகின்றார். ஒருத்தரை சரியா பார்க்கிறது என்பது போல நான் அவரை சரியாக பார்க்கின்றேன். எல்லாருக்கும் ஒரு கருத்து இருக்கும் தானே..
இப்போ நாம மாறி மாறி நடிக்கிறது..நான் உன்னை சொல்லுவேன் நீ என்ன சொல்லு என்ற ஒப்பந்தம் போல எதுவும் கிடையாது . அவர் சரியாக இருக்கின்றார் என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார் ரஞ்சித்.
Listen News!