• Jan 19 2025

நயன்தாரா என்ன செய்றாங்க பாருங்க..!! க்யூட்டாக வெளியான வீடியோ

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நயன்தாரா என்ற பெயரை உச்சரிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு புகழின் உச்சியில் காணப்படுபவர் தான் நடிகை நயன்தாரா.

மலையாள நடிகையான இவர், ஐயா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். அதற்குப் பிறகு முன்னணி நட்சத்திரங்களான ரஜினி காந்த், விஜய், சூர்யா, அஜித் என பிரபல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை கொடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவனை ஆறு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு உயிர், உலக் என்ற இரு மகன்களும் உள்ளார்கள்.

நடிகை நயன்தாரா தனது தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா வாழ்க்கை, குடும்பம் என அனைத்தையுமே கவனித்து வருவதோடு தற்போது அவர் பிசினஸிலும் இறங்கியுள்ளார். இவரது தயாரிப்புகள் சிங்கப்பூர், இந்தியா, கனடாவிலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆன பாடல் ஒன்றுக்கு தனது ஃபெமினா உற்பத்தி பொருளை கையில் வைத்து கியூட்டாக ரியாக்சன் கொடுத்துள்ளார்.

அதாவது பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் உற்பத்தியை மேற்கொண்டு வரும் நயன்தாரா, தரமானதாகவும் பாதுகாப்பானதாகவும் உள்ள வகையில் அதை தயாரித்து வருகின்றார். அதை வைத்தே தற்போது ஃபோட்டோ ஷூட், வீடியோ என்பவற்றை ப்ரோமோட் செய்யும் வகையில் வெளியிட்டு வருகிறார்.  


Advertisement

Advertisement