• Jul 24 2024

தன் மகனை மணமுடிக்கும் ராதிகாவுக்கு முகேஷ் அம்பானி கொடுத்த சொத்து!

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டுக்கும்  திருமண ஏற்பாடுகள் தற்போது தடபுடலாக நடைபெற்று வருகின்றன.

கடந்த மார்ச் மாதம் இவர்களுடைய ப்ரி வெட்டிங் பங்க்ஷன் நடத்தப்பட்டு சுமார் மூன்று நாட்களுக்கு கோலாகலமாக  முன்னணி நட்சத்திரங்களும், உலகில் பிரசித்தி பெற்ற பாடகர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தார்கள்.

அதேபோல தற்போது ஆனந்த அம்பானியின் திருமணத்தை முன்னிட்டு கிரிக்கெட் வீரர்கள் தொடக்கம் பிரபல திரையுலக நட்சத்திரங்களும் பங்கு பற்றி சிறப்பித்து வருகின்றார்கள். இவர்களுடைய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.


இந்த நிலையில், ஆனந்த் அம்பானியை திருமணம் செய்து கொள்ளும்  ராதிகா மெர்ச்சண்டுக்கு சுமார் 640 கோடி மதிப்பிலான துபாயிலுள்ள சொகுசு வில்லா ஒன்றை பரிசளித்துள்ளார் முகேஷ் அம்பானி தம்பதியினர்.

தற்போது இந்த தகவல்கள் வைரலாகி வருவதோடு ஆனந்த்  அம்பானியின் திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement