வெற்றி மாறன் இயக்கிய விடுதலை-2 திரைப்படத்தின் ரிலீஸ் நெருங்குவதால் திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ப்ரோமோஷனுக்காக நடிகர் சூரி, நடிகை மஞ்சுவாரியர் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டனர்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டில் விஜய் சேதுபதி-நானும் KS.ரவிக்குமார் சாரும் ஒரே காலேஜில் படிச்சோம் அப்ப இவரு பெரிய ரவுடி என்று கூறியுள்ளார். அப்படியா என்று இயக்குநர் KS.ரவிக்குமார் அதிர்ச்சியாகிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விடுதலை-2 ப்ரோமோஷன் நிகழ்வில் KS.ரவிக்குமார் நான் படிச்ச காலேஜில தான் விஜய் சேதுபதி படிச்சாரு என்பது இப்போ அவரே சொன்னதும் தான் எனக்குதெரியும் என்று சொன்னார். உடனே விஜய் சேதுபதி "ஆமா சார் நாங்க 2 பேரும் ஒரே காலேஜில தான்படிச்சோம், அப்போ ஒரு சின்ன பிரச்சினை நடந்தது என்னனா தீனதயாளன் என்று ஒரு வாத்தியார் இருந்தாரு அவரு எங்களுக்கு பாடம் நடத்தும் போது ஒரு பையன் லேட்டா வந்து ரவுடி தனம் பண்ணிட்டு இருந்தான்.
இத பார்த்த வாத்தியார் கேள்வி கேட்டாரு உடனே அவன் அவரை பார்த்து மொறச்சான், உடனே வாத்தியார் KS.ரவிக்குமாரவிட பெரிய ரவுடியாடா நீ? என்று கேட்டாரு அப்போதான் எனக்கும் தெரியும் சார் அந்த காலேஜ்ல தான் படிச்சாரு என்று" என விஜய் சேதுபதி கூறினார். இதனை கேட்டு அங்கு இருந்த அனைவரும் சிரித்து விட்டார்கள். உடனே KS.ரவிக்குமார் இல்ல இல்ல நான் அப்படி இல்லை என்று கூறி அவரும் சிரிக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Listen News!