• Jan 18 2025

முத்துவினால் வந்த சண்டை! விஜயா சொன்ன விஷயம்! அதிர்ச்சியில் குடும்பம்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடைபெறுகிறது என்று பார்ப்போம் வாங்க. மனோஜின் வீட்டை பார்க்க போக எல்லோரும் ரெடியாகி கொண்டு இருக்கிறார்கள். மீனா பூ கட்டிக்கொண்டு இருக்கிறார் அங்குவந்த முத்து மீனாவுக்கு உதவி செய்கிறார். அப்போது மீனா ஓடர் கொடுத்த மண்டபத்திற்கு வந்த சிந்தாமணி பற்றி முத்துவிடம் கூறுகிறார். 


அவங்க பேச்சி நடவடிக்கை சரியே இல்லை அவங்க ஓடரை நான் தட்டி பறிக்களையே, என்னோட வேலை புடிச்சி கல்யாண ஓடர் தாராங்க இவங்க ஏன் இப்படி பண்ணுறாங்கனு தெரியல என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். முத்து- புது வேலை ஆரம்பிச்சா அப்டித்தான் நடக்கும் விடு பார்த்துக்கலாம் என்று சமாதானம் படுத்துகிறார். 


அடுத்த நாள் வீட்டில் உள்ள எல்லோரும் மனோஜின் புதிய வீட்டை பார்க்க செல்கிறார்கள். காரில் போய் இறங்கியதும் விஜயா ஓடி சென்று வீட்டை பார்க்கிறார். இவ்வளோ பெரிய வீடா சொர்க்கம் மாதிரி இருக்கு என்று சொல்கிறார். வீட்டின் ஓனர் உங்க மனைவி மாதிரியே உங்க அம்மா முகமும் மங்களகரமா இருக்கு. அப்படியே நல்ல நேரத்தோட சைன் பண்ணி சாவிய உங்ககிட்ட கொடுக்கணும் என்று சொல்கிறார்.  உடனே எல்லாரும் சம்மதம் சொல்ல பத்திரத்தில் கையெழுத்து போட்டுவிட்டு பணத்தையும் ஓனரிடம் கொடுத்து விட்டு சாவியை வாங்குகிறார் மனோஜ். இதனை பார்த்த விஜயா ஆனந்த கண்ணீர் விட்டு மனோஜ்- ரோகிணியை கட்டி அணைத்துகொள்கிறார். மனோஜ் விஜயாவை சமாதானம் செய்கிறார்.


வீட்டு ஓனர் பணத்தை வாங்கி கொண்டு 6 மாசத்துல பணத்தை கட்டிட்டா இது முழுசா உங்க வீடு என்று சொல்லிவிட்டு நாளைக்கு எங்களுக்கு பிளைட் இருக்கு நாங்க போகணும் என்று சொல்லி அவசர அவசரமாக செல்கிறார்கள்.காரில் வேகமாக போகும் போது முத்து-மீனா வருகிறார்கள் கார் மோதிக்கொள்ளும் அளவுக்கு வரவே முத்து காரிலில் இருந்து இறங்கி வந்து சண்டை போடுகிறார். சத்தம் கேட்டு அணைவரும் வெளியே வந்து விடுகிறார்கள். பின்னர் ஏன் ஓனருடன் சண்டை போடுகிறார் என்று மனோஜ் முத்துவை பார்த்து கேட்கிறார். ஓனரா வாடகை காரில் போறாரு என்று சந்தேகத்துடன் பார்க்கிறார்.  இப்பவே போய் கேக்குறேன் மனோஜை ஏமாற்றா போறாங்க என்று சொல்கிறார். அண்ணாமலை அவரை சமாதானம் செய்து வீட்டுக்குள் அனுப்பி விடுகிறார். 


ஒரு பக்கம் மீனா, மனோஜ், சுருதி வீட்டின் பின் உள்ள கடற்கரையில் விளையாடுகிறார்கள். விஜயா வீட்டை சுற்றி பார்க்கிறார். பின்னர் அண்ணாமலையிடம் சென்று மனோஜிக்கு கிடைத்த அதிஷ்ட்டம் ரோகிணி அதுனாலதான் படிப்படியா மேல வாரான் என்று சொல்கிறார். அதனை கேட்டு கொண்டிருந்த முத்து அம்மா சொன்னது சரிதான் அப்பா ஒரு நல்ல மனைவி அமைந்தால் வீடு வாங்கலாம்னு அம்மா சொன்னாங்க இப்ப தான் விளங்குது ஏன் இன்னும் நீங்க வீடு வாங்க இல்லைனு என்று கலாய்க்கிறார். இதனால் விஜயா கோப்படுகிறார். 


விஜயா சுருதியிடம் மனோஜ் வீடு ரொம்ப பெருசா இருக்கு என்று சொல்கிறார். இதனை கேட்ட ரோகிணி இந்த விட பெரிய பீச் ஹவுஸ் இருக்கு, ஆலப்புலலா எங்களுக்குனு சொந்தமா போட் இருக்கு என்று சொல்கிறார். இதனை கேட்ட விஜயா உடனே இங்க தான் பீச் இருக்கே பெரிய கப்பலை வாங்கி நிறுத்துடா என்று சொல்கிறார் எல்லோரும் அதிர்ச்சி ஆகி பார்க்கிறார்கள் அத்தோடு இன்றைய நாள் எபிசோட் முடிவடைகிறது.   


Advertisement

Advertisement