• Nov 22 2024

'கேப்டன்' மரணத்திற்கு இது தான் முக்கிய காரணமா? சிகிச்சையளித்த மருத்துவர் உண்மையை உடைத்தார்!

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகரான விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்த செய்தி ரசிகர்கள், கட்சி ,மக்கள்,குடும்பம் என்று  எல்லோரையும் பாதித்தது . அவர் உடல் நலக்  குறைவால் திடீரென உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும் , சோகத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது .  

கடந்த டிசம்பர் 26 ம் திகதி வியாட் மருத்துவமனைக்கு வழக்கமான பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த், இன்டைக்கு வீடு திரும்புவார் என்று எதிர்ப்பார்க்க பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தினால் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டுள்ளார். இதையடுத்தே அவர் உயிரிழந்துள்ளார்.


இந்த நிலையில், நடிகர் விஜயகாந்திற்கு வைத்தியம் பார்த்த டாக்டர் ப்ரித்வி  மோகனதாஸ் அவர்எப்படி உயிரிழந்தார் என்று அறிக்கை மூலம் கூறியுள்ளார் அதன்படி, அவர் வெளியிட்ட மருத்துவ அறிக்கையில்,

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நுரையீரல் அழற்சி (pneumonia ) காரணமாக  மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு  வென்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெற்றுள்ளார் . மருத்துவ பணியாளர்களின் கடுமையான முயற்சி இருந்த போதிலும் அவர் இன்று காலை 28 டிசம்பர் 2023 காலமானார் என்று வைத்தியர் கூறியுள்ளார் . 


அதன்படி, அவரது நுரையீரலில் ஏற்பட்ட தொற்று தான் அவரது உயிரிழப்பிற்கு முக்கிய காரணம் என மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளது.. 

மேலும், தற்போது அவரின் மறைவை அறிந்த பல பிரபலங்களும் மனம் வருந்தி  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement