• Apr 17 2026

நடிகர் விஜயகாந்தின் மறைவை அறிந்து சூப்பர் ஸ்டார் உடனே செய்த காரியம்! மிகுந்த வேதனையில் ரசிகர்கள்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'கேப்டன்' என அழைக்கப்பட்ட பிரபலமான  நடிகர் தான் விஜயகாந்த். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.

கடந்த சில மாதங்களாக விஜயகாந்தின் உடல்நலனில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. எனினும், அவருக்கு பல்வேறு மருத்துவ கண்காணிப்புகள் இருந்த நிலையிலும், இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். இதனால் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் பேரதிர்ச்சியில் இருக்கின்றனர்.


இந்த நிலையில், நடிகர் விஜயகாந்தின் மறைவு செய்தியை அறிந்ததும்,  நாகர்கோயிலில் நடைபெற்று வந்த வேட்டையன் படப்பிடிப்பை உடனே நிறுத்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த அங்கிருந்து சென்னை புறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 


அதேவேளை, உச்ச நடிகர்களாக வலம்வந்த விஜயகாந்தும், ரஜினி காந்தும் இதுவரையில் நல்ல நட்பை தொடர்ந்து வந்த நிலையில், கடந்த மாதம் மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டிருந்த போது பிரார்த்தனை செய்து பதிவிட்டு இருந்தார் ரஜினி. 

இவ்வாறான நிலையில், நடிகர் விஜயகாந்தின் மறைவை அறிந்த ரஜினிகாந்த்  இ உடனடியாக சென்னைக்கு புறப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

Advertisement