• Jan 19 2025

அண்ணா சீரியல் நடிகர் மிர்ச்சி செந்திலின் மகனா இது?- இவ்வளவு அழகாக வளர்ந்து கியூட்டாக இருக்கின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!


சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலம் பிரபலமானவர்கள் செந்திலும் ஸ்ரீஜாவும். இவர்கள் இருவரையும் காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தொடருக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை சீரியலில் நடித்தனர்.


மேலும் கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை என்ற வெப் சீரிஸிலும் அவர்கள் இருவருமே நடித்து வந்தனர். இந்த சீரிஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த வெப்சீரிஸ் 3 சீசன்கள் ஓடியது. திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன பிறகு கடந்த ஆண்டு ஸ்ரீஜா கர்ப்பம் ஆகி அண்மையில் ஆண் குழந்தையும் பிறந்தது.


தொடர்ந்து இருவரும் இணைந்து மாப்பிள்ளை, நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 1 மற்றும் சீசன் 2 ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார். மேலும் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் நடித்து வருகிறார்.


 இந்நிலையில், தீபாவளி வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை மிர்ச்சி செந்தில் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், செந்தில் - ஸ்ரீஜா மகனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே என கூறி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement