• Jan 19 2025

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஐஷூவிற்கு கொடுக்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பரபரப்புக்கு பங்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் ஸ்மோல் ஹவுஸ், பிக்பாஸ் ஹவுஸ் என இரண்டு வீடுகள் இருப்பதால் போட்டியாளர்கள் அடிக்கடி தமக்குள் சண்டையிட்டும் வருகின்றனர். மேலும் பிரதீப்புக்கு ரெட்காட் கொடுத்த விடயம் பூதாகரமகவும் வெடித்தது.

மேலும் நேற்றைய தினம் பிக்பாஸ் வீட்டிலிருந்து ஐஷூ வெளியேறினார். இவர் தன்னுடைய பெற்றோரின் வேண்டுகோளுக்கிணங்கவே வீட்டை விட்டு வெளியேறியதாககூறப்படுகின்றதுஇ திறமையான பெண்ணானன ஐஷூ வெளியேறியதற்கு முக்கிய காரணம், நிக்ஸன் - ஐஷூ இடையேயான உறவு தான். அது நட்பா, காதலா என வீட்டில் இருப்பவர்களே குழம்பி போனார்கள். இருவரும் கண்ணாடி முன் நின்று முத்தமிட்டுக்கொண்டது, இரட்டை அர்த்தத்தில் பேசியது வரை இணையவாசிகள் இருவரின் செயல்பாடுகளையும் கண்டித்தனர். 


இதையடுத்து, அவருக்கு மக்களின் ஆதரவு இல்லாததால் அவர் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் 42 நாட்கள் இருந்த ஐஷூ வாங்கி உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஐஷூவிற்கு ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.


 ஆகையால், இவருக்கு ஜி.எஸ்.டி போக, சுமார் 8 லட்ச ரூபாய் அவருக்கு சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் ரொமான்ஸ் பண்ணதுக்கு சம்பளமா என கேலியாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement