• Jan 18 2025

திருமணத்திற்கு ரெடியான தமன்னா மற்றும் விஜய் வர்மா ஜோடி- வெடிங் எப்போது தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தமன்னா. 'கேடி' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக தமன்னா என்ட்ரி கொடுத்தார். தனது முதல் படத்தில் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஓரளவுக்கு ஈர்த்த தமன்னா, தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் தமன்னா சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். மாடர்ன் உடையில் போட்டோஷூட் செய்து ரசிகர்களை லைக்குகளையும், மனதை கொள்ளையடித்து வருகிறார். 


இவர் பிரபல நடிகர் விஜய் வர்மாவுடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்பட்டது.அண்மையில் அவர்கள் இருவரும் இணைந்து வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் கூட வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.

மேலும் இதுகுறித்து பேசிய நடிகை தமன்னா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 படபிடிப்பின் போது தான் தங்களுக்குள் நெருக்கம் அதிகமாகியது என்று கூறினார். அதன் பிறகு அவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு ஒன்றாக சுற்றுலா சென்று திரும்பியதாகவும் தகவல் வெளியானது.


இந்நிலையில் தம்மனா வீட்டில் அவருக்கு 33 வயது ஆகிவிட்டது என்று கூறி, விரைவில் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமன்னா மற்றும் விஜய் வர்மா ஜோடி வெகு விரைவில் தங்களுடைய திருமண செய்தியை அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement