• Sep 07 2026

அன்று விஜய்யால் திட்டு வாங்கினேன்.. இன்று அவர் தான் முன்னுதாரணம்.. CM குறித்து சதீஷ் பகீர்

shali / 57 minutes ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமின்றி, தற்போது தமிழக முதலமைச்சராகவும் கவனம் பெற்றுள்ள விஜய் குறித்து நடிகர் சதீஷ் தெரிவித்துள்ள கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சதீஷ், விஜய்யுடனான தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். “காதலுக்கு மரியாதை” திரைப்படம் வெளியான காலகட்டத்தில் தான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்ததாகவும், அப்போது விஜய் மீது தனக்கு இருந்த ரசிகர் உணர்வையும் அவர் நினைவுகூர்ந்தார்.


அதாவது படிக்கும் போது விஜய் சாரின் புகைப்படத்தை புத்தகத்திற்குள் வைத்து பாதுகாத்து வந்ததாகவும், நடிகரின் புகைப்படத்தை புத்தகத்தில் வைத்ததற்காக ஆசிரியர்களிடம் திட்டும் வாங்கியதாகவும் சதீஷ் தெரிவித்துள்ளார். ஆனால், காலம் மாறிய நிலையில் இன்று அதே விஜய்யின் புகைப்படம் பல பள்ளிகளின் தலைமையாசிரியர் அறைகளில் இடம்பெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், விஜய்யின் வளர்ச்சியை கடின உழைப்பு மற்றும் வெற்றிக்கான அடையாளமாக சதீஷ் பாராட்டியுள்ளார். ரசிகராக இருந்த காலத்தில் புத்தகத்திற்குள் மறைத்து வைத்த புகைப்படம், இன்று அதிகாரபூர்வமாக பள்ளி அறைகளில் இடம்பெறும் அளவுக்கு விஜய்யின் பயணம் உயர்ந்திருப்பதாக அவர் கூறியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சதீஷின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு, விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.


Advertisement

Advertisement