• Oct 01 2026

மீண்டும் ஹீரோவாகும் ராமராஜனின் புதிய பட அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.! என்ன தெரியுமா.?

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகனாக ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகர் ராமராஜன். ‘மக்கள் நாயகன்’ என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவர், தற்போது மீண்டும் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். 

அந்த வகையில், ராமராஜன் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்திற்கு ‘கடவுள் தந்த பரிசு’ என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


இந்த அறிவிப்பில் மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். ராமராஜன் - இளையராஜா கூட்டணி என்றாலே ரசிகர்களுக்கு ஏராளமான பழைய நினைவுகள் நினைவுக்கு வரும். 

இவர்களது கூட்டணியில் உருவான பல பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகின்றன. இதனால் ‘கடவுள் தந்த பரிசு’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

படத்தின் தலைப்பே ரசிகர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, ‘கடவுள் தந்த பரிசு’ என்ற தலைப்பு கதையின் மையக்கருவுடன் எப்படி தொடர்புபட்டுள்ளது? ராமராஜன் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்? என்பது தான் தற்போது ரசிகர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமராஜனுக்கு இளையராஜா இசையமைப்பது ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் ட்ரீட்டாக அமைந்துள்ளது. இதனால் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement