தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் பயணித்து வருபவர் ஜி.வி. பிரகாஷ். இவர் இசையால் பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும், ஹீரோவாக அவர் நடித்த படங்களில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்ற படங்களாக ‘டார்லிங்’ மற்றும் ‘பேச்சுலர்’ ஆகியவை மட்டுமே அமைந்துள்ளன. இதனால், அடுத்தடுத்த படங்களில் வெற்றியை எதிர்பார்த்து தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.
இந்நிலையில், ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி வெளியான ‘இம்மார்ட்டல்’ திரைப்படம் அவருக்கு மீண்டும் ஒரு வெற்றியை தேடித் தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் வெளியான முதல் நாளிலேயே ரசிகர்களிடையே பாசிட்டிவான மவுத் டாக் உருவானதாக கூறப்படுகிறது.

இதன் தாக்கம் இரண்டாவது நாளிலேயே திரையரங்க டிக்கெட் புக்கிங்கில் எதிரொலித்துள்ளது. குறிப்பாக வார இறுதி நாட்களில் படத்திற்கான வரவேற்பு மேலும் அதிகரித்ததாக தெரிகிறது.
சாக்னிக் தரவுகளின்படி, ‘இம்மார்ட்டல்’ திரைப்படம் வெளியான முதல் மூன்று நாட்களில் இந்திய அளவில் ரூ.5.23 கோடி வசூலை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன்மூலம் நீண்ட நாட்களாக ஒரு ஹிட் வெற்றியை எதிர்பார்த்து வந்த ஜி.வி. பிரகாஷுக்கு ‘இம்மார்ட்டல்’ திரைப்படம் நம்பிக்கை அளிக்கும் படமாக மாறியுள்ளது. குறிப்பாக கயாடு லோஹரின் வரவேற்பும் படத்தின் வசூலுக்கு கைகொடுத்துள்ளதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
Listen News!