• Jan 20 2025

சிறு காயங்களுடன் நூலிழையில் உயிர் தப்பினேன்..! பிரியங்கா மோகனின் அதிர்ச்சி வீடியோ

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருபவர்தான் பிரியங்கா மோகன். இவர் முதலில் தெலுங்கு மொழியில் தான் அறிமுகம் ஆனார். அதன்படி நானி நடிப்பில் வெளியான கேங் லீடர் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின் இவரை இயக்குனர் நெல்சன் திலிப் குமார் தான் தமிழ் சினிமா பக்கம் இழுத்து வந்தார்.

2021 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் ஹீரோயினாக நடித்தார். இவர் நடித்த முதல் படத்திலேயே தனது க்யூட்டான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். இந்தப் படத்தின் வெற்றி தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் படத்தில் நடித்தார். அந்தப் படமும் வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்த போதும், அந்த படம் மோசமான தோல்வியை சந்தித்தது. தற்போது தமிழில் தொடர்ந்து நடித்து வருகின்றார். இறுதியாக தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார். தற்போது ஜெயம் ரவியுடன் பிரதர் படத்தில் நடித்து வருகிறார்.


இந்த நிலையில், பிரியங்கா மோகன் இன்றைய தினம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது திடீர் என மேடை உடைந்து விழுந்து சிறிய விபத்தில் சிக்கியுள்ளார். இது அவருடைய ரசிகர்கள் மத்தியில் மட்டும் இன்றி பிரபலங்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பில் அவர் கூறுகையில்,  இன்றைய தினம் தொரூரில் நிகழ்ச்சியில் நடந்த விபத்தில் நான் நலமாக இருக்கிறேன். சிறு  காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன் என்பதை எனது நலன் விரும்புகளுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன். என்று குறிப்பிட்டுள்ளார்.எனினும் ரசிகர்கள் அவருடைய நலன் குறித்து மாறி மாறி கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Advertisement

Advertisement