• Jan 20 2025

மணிமேகலை கோமாளிக்கு தான் சரியானவர்.. அடுத்த குண்டை போட்ட ஜோ மைக்கேல்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு தான் பிரம்மாண்டமான இறுதிப் போட்டியுடன் முடிவுக்கு வந்தது. இந்த சீசனில் குக் வித் கோமாளி டைட்டிலை பிரியங்கா தேஷ் பாண்டே வெற்றி பெற்று இருந்தார்.

அதற்கு முன்பே இந்த சீசனில் தொகுப்பாளினியாக பங்கு பற்றி  வந்த மணிமேகலை, குக் வித் கோமாளியில் போட்டியாளராக பங்குபற்றிய ஒருவர் தன்னை வேலை செய்ய விடாமல் இடையூறு செய்வதாக தெரிவித்து தனக்கு சுயமரியாதை தான் முக்கியம் என்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகி இருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து மணிமேகலைக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்தார்கள். ஆனாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பற்றிய ஒருவரும் அவருக்கு ஆதரவாக பேசவில்லை. அதே நேரத்தில் பிரியங்காவுக்கு ஆதரவாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பற்றியவர்கள் பிரியங்கா மீது எந்த தப்பும் இல்லை மணிமேகலை கொஞ்சம் பொறுத்து போய் இருக்கலாம் என்ற வகையில் கருத்துக்களை தெரிவித்தார்கள். இவ்வாறு இருவருக்கு இடையிலான பிரச்சனையில் பலர் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.


இந்த நிலையில், பிரியங்கா மணிமேகலை  விவகாரம் தொடர்பாக ஜோ மைக்கேல் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில், மணிமேகலை மற்றும் பிரியங்காவில் யார் சிறந்த ஆங்கர் என்று கேட்டால் தான் பிரியங்காவை தான் சொல்லுவதாக கூறினார். மேலும் சன் டிவியிலும் மணிமேகலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். 

ஆனால் உண்மையாகவே நிகழ்ச்சிகளுக்கு ஆங்கராக செயல்படக்கூடிய திறமை பிரியங்காவுக்கு தான் உள்ளது. அது மணிமேகலைக்கு சரியாக செட்டாகவில்லை. அவர் கோமாளிக்கு தான் சரி. ஆனால் பிரியங்கா கோமாளியாக நடித்தால் அது பார்க்கும் எங்களுக்கு எரிச்சலை ஊட்டும் என்று மணிமேகலை கோமாளியாக இருக்கத்தான் சரி எனவும் பிரியங்கா தான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்கு சரியானவர் என்றும் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement