• Jan 20 2025

எனக்கு பதவி வேண்டாம்.. முதல் நாளே பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் கோபி

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

இந்தியாவில் இடம்பெற்ற மக்களவைத் தேர்தலில் கேரளா நடிகர் சுரேஷ் கோபிக்கு இசையமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தது. கேரளாவில் முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் கேரளா நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றார்.

இதனால் கேரளாவில் பாஜக தனது முதல் கணக்கை ஆரம்பித்து இருந்தது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் இணை அமைச்சராக சுரேஷ்கோபி பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் மலையாள தனியார் சேனல் ஒன்றுக்கு சுரேஷ் கோபி கொடுத்த பேட்டி தற்போது வைரலாகி உள்ளது.

அதற்கு காரணம், சினிமாவில் நடிக்க இருப்பதால் அமைச்சர் பதவி வேண்டாம் எனக் கூறினேன். மத்திய அமைச்சர் பதவியில் இருந்து என்னை விடுவிப்பார்கள் என நம்புகின்றேன் என கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.

இவ்வாறு,  தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறியுள்ளார் சுரேஷ் கோபி. ஆனால் பாஜகத் தலைமை கேட்டுக் கொண்டதன் பெயரில் பொறுப்பேற்றுக் கொண்டேன் என தெரிவித்துள்ளார் தற்போது இவர் அளித்த பேட்டி வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement