• Oct 01 2026

சீமானுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த சேயோன் படக்குழு.. லீக்கான லேட்டஸ்ட் போஸ்டர் இதோ.!

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

நாதக தலைவர் சீமான், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்கிறார். மேலும், பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.


சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் ‘சேயோன்’, மதுரை மக்களின் வாழ்வியல் மற்றும் அப்பகுதியை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படமும் அதே தேதியை குறிவைத்துள்ளதால், ‘சேயோன்’ படத்தை அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே சீமான் இப்படத்தில் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும், அவர் சிவகார்த்திகேயனின் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கு முன்பு ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு தந்தையாக சீமான் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement