தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி லண்டன் செல்லவிருக்கும் நிலையில், அங்கு கார் பந்தயத்தில் கலந்துகொள்ளும் நடிகர் அஜித்தை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்த விஜய், தற்போது தமிழக முதலமைச்சராக அரசியல் களத்தில் பயணித்து வருகிறார். அவரது தலைமையிலான அரசு பொறுப்பேற்று சுமார் 120 நாட்களை நெருங்கும் நிலையில், அரசின் செயல்பாடுகள் குறித்து பாராட்டுகளும் விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

இதனிடையே, தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இந்த கூட்டத்தொடரில் தமிழ்நாட்டில் மோட்டார் சிட்டி அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். இதற்கு நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் நன்றி தெரிவித்து வெளியிட்ட அறிக்கை கவனம் பெற்றது.
இந்நிலையில், தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் செப்டம்பர் 10 முதல் 16-ஆம் தேதி வரை விஜய் லண்டனில் பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அஜித்தும் லண்டனில் நடைபெறும் கார் பந்தயத்தில் தனது அணியுடன் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் இருவரும் நேரில் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும், அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை விஜய் நேரில் பார்வையிடலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், மலேசிய பிரதமரின் சென்னை வருகை காரணமாக விஜய்யின் லண்டன் பயணம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!