• Feb 23 2025

வீட்டை விட்டு வெளியேறும் பாண்டியன்! பதற்றத்தில் கோமதி! பாண்டியன் மூத்த மகன் செய்த சத்தியம்!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் மகா சங்கம் தொடரில் 


ராஜியும் கதிரும் திருமண கோலத்தில் வந்து நிற்க இரு வீட்டாரும்  அதிர்ச்சியடைந்து நிற்கிறார்கள். அதன் பிறகு ராஜிடம் பேசிய பாக்கியா, எல்லாருமே உனக்காக கஷ்டப்பட்டு இருக்காங்க. உன் கூட நின்னு இருக்காங்க. அந்த நன்றியை நீ என்னைக்கும் மறக்கக்கூடாது என்று ராஜிக்கு அட்வைஸ் பண்ணுகிறார்.


அது போலவே கதிரிடமும், நீ அப்படியே என் பிள்ளை எழில் மாதிரி. அவன் எனக்காக என்ன வேணாலும் செய்வான். அதுபோலவே நீயும் உன் அம்மாவுக்காக எல்லாம் செஞ்சிருக்க நீ நல்லா வருவா என்று வாழ்த்து கூறி எழிலும் பாக்கியாவும் சென்னைக்கு கிளம்பி வருகிறார்கள்.


அந்த பிறகு பாண்டியன் ரூமில் கவலையாக யோசித்து கொண்டு இருக்கிறார். அப்போது அங்கு வந்த கோமதி உங்ககிட்ட பேசணும் என்று சொல்ல பாண்டியன் கோபத்துடன் வெளியே சென்று விடுகிறார். அதன் பிறகு நீண்ட நேரம் ஆகியும் பாண்டியன் வீட்டுக்கு வராததால் கோமதி பதற்றத்துடன் பாண்டியனை தேடுமாறு தனது மூத்த மகனை அனுப்புகிறார்.   


பாண்டியன் மகன் அவரை தேடி கடைசியாக அவரின் கடையில் பாண்டியன் இருப்பதை கண்டு அங்கே செல்கிறார். அதன் பிறகு தனது இரண்டு மகன்களும் இப்படி தனது விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டது தனக்கு வேதனை தருவதாக கூறி அழுகிறார். எப்படி இனி நான் ஊரார் முகத்தில் முழிப்பேன் என புலம்புகிறார்.


அப்போது அவரின் அழுகையை பார்த்த மூத்த மகன் நான் அவங்கள மாதிரி கல்யாணம் பண்ணி கொள்ள மாட்டேன் என்று பாண்டியன் தலையில் அடித்து சத்தியம் செய்கிறார். 

Advertisement

Advertisement