• Jan 19 2025

விஜயகாந்த் இறப்புக்கு வராத அஜித்.. வெற்றி இறப்புக்கு முதல் ஆளாய்.. தாறுமாறாய் திட்டும் நெட்டிசன்ஸ்..!

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தாத அஜித், வெற்றி சாமி மறைவுக்கு மட்டும் முதல் ஆளாய் வந்து அஞ்சலி செலுத்தியது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் தாறுமாறாய் அஜித்தை திட்டி வருகின்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கேப்டன் விஜயகாந்த் காலமானபோது பல முக்கிய பிரமுகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை. குறிப்பாக அஜித், சூர்யா, விஷால் உள்ளிட்டோர் வெளிநாடுகளில் இருந்ததை காரணம் காட்டி விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தவில்லை. ஆனால் விஷால், சூர்யா இந்தியாவுக்கு திரும்பிய பிறகு அவருடைய நினைவகத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, விஜயகாந்த் வீட்டிற்கும் சென்று அவருடைய குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.

ஆனால் அஜித் மட்டும் விஜயகாந்த் மறைவுக்கும் வரவில்லை, அதன் பிறகு நினைவகத்தில் சென்று கூட மரியாதைக்கு ஒரு மலர் வளையம் கூட வைக்கவில்லை என்பது பெரும் விமர்சனமாக இருந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மறைவுக்கு முதல் ஆளாய் அஜித் அவருடைய வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியுள்ளதை பார்க்கும்போது நெட்டிசன்கள் கடுப்பாக்கி உள்ளனர். தன்னுடைய துறையில் உள்ள ஒரு பிரமுகர் இறந்தபோது வராத அஜித், ஒரு அரசியல்வாதியின் மகனின் மரணத்திற்கு வருகை தருகிறார் என்று கூறியுள்ளனர்.

ஆனால் அஜித் ரசிகர்கள் இதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். வெற்றி துரைசாமி, அஜித்தின் நெருங்கிய நண்பர் என்றும் அவர் பைக் பயணம் செய்யும்போது எல்லாம் வெற்றி துரைசாமி உடன் சென்றவர் என்றும், அதுமட்டுமின்றி குடும்ப அளவில் இரு குடும்பங்களும் மிகவும் நெருங்கிய நட்பு கொண்டவர்கள் என்றும் அதனால் தான் அஜித் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் என்றும் கூறி வருகின்றனர். இருப்பினும் நெட்டிசன்கள் சமாதானம் அடையாமல் அஜித்தை தொடர்ந்து சமூக வலைதளங்களில் திட்டி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement