• Jan 07 2026

8வது வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?- இப்போ தான் ஆட்டம் சூடு பிடிக்குது....

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக சென்றுகொண்டு இருக்கின்றது. இந்த சீசன் துவங்கி ஐம்பது நாட்களை கடந்துள்ள நிலையில் சுவாரஸியத்திற்கும் விறுவிறுப்பிற்கும் பஞ்சமில்லாமல் சென்றுகொண்டு இருக்கின்றது. 

18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக ஐம்பது நாட்களை நெருங்கியுள்ளது. மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் மோதல்கள் அதிகளவில் இருக்கின்றன.


மேலும் ரசிகர்களின் பேராதரவை பெற்ற போட்டியாளராக வலம் வந்த பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது ரசிகர்களை உச்சகட்ட ஏமாற்றத்திற்கு ஆளாக்கியது. அவருக்கு ரெட் கார்டு வழங்க காரணமாக இருந்த மாயா மற்றும் பூர்ணிமா ஆகியோர் மீது ரசிகர்கள் உச்சகட்ட கோபத்தில் இருக்கின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் வாரம் ஒருவர் வெளியேறுவது வழமையான விடயமே.இந்த நிலையில் தற்பொழுது நடத்தப்பட்ட மக்களின வாக்குக் கணிப்பு பற்றிய விபரம் வெளியாகியுள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் கானா பாலா அவர்கள் தான் மிக குறைந்த வாக்குகளை பெற்றுள்ளார், அவரை தொடர்ந்து அக்‌ஷயா, பூர்ணிமா, ரவீனா, ஆர் ஜே ப்ரோவோ, மணிசந்திரா அவர்கள் குறைந்த வாக்குகளில் இருக்க, விசித்ரா அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார்.


இதை வைத்து பார்க்கையில் கானா பாலா இந்த பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது, என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement