• Jan 19 2025

இரண்டாவது திருமணம் செய்வது காய்கறி வாங்குவது போல அவ்வளவு ஈசியா- கொந்தளித்துப் பேசிய மீனாவின் நண்பி

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் 90களில் தவர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. கண்ணழகினாலேயே ஏராளமான ரசிகர்களைக் கட்டிப் போட்ட இவர் தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் மட்டும் நடித்து வருகின்றார்.

இவரது கணவரான வித்யாசாகர் கடந்த வருடம் நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழந்தார்.கணவர் இறந்தபின் மீனாவை சோகத்தில் இருந்து மீண்டு வர அவரது தோழிகள் தான் உதவி செய்தனர். இதனை அடுத்து மீனா தனது கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.


மீனாவின் கணவர் இறந்ததில் இருந்து அவருக்கு உதவியாக நின்றவர் தான் கலா மாஸ்டர்.மீனா கணவரின் இறுதி சடங்குகளுக்கான ஏற்பாடுகளையும் அவர் தான் கவனித்தார்.மீனா இரண்டாம் திருமணம் செய்ய இருக்கிறார் என தொடர்ந்து செய்திகள் அடிக்கடி பரவிக்கொண்டே தான் இருக்கிறது. இதுபற்றி கலா மாஸ்டர் தற்போது ஒரு பேட்டியில்  பேசி இருக்கிறார்.

"சின்ன வயது பெண் அவரது கணவரை இழந்த துக்கத்தில் இருந்து மீண்டு வர எத்தனை வருடங்கள் ஆகும். அதை பற்றி நாமே யோசிக்க வேண்டாமா. இதை பற்றி சிலர் என்னிடமே கேட்டார்கள்.. 'எதற்கு stupid-ஆ கேள்வி கேக்குறீங்க' என நான் திட்டிவிட்டேன்."

"தோழிகள் நாங்கள் மீனாவிடம் பேசும்போது இரண்டாம் திருமணம் பற்றி விளையாட்டாக கேட்டால் கூட, அவள் கோபமாகி முறைப்பாள். இரண்டாம் திருமணம் செய்ய இது என்ன காய்கறி வாங்குவது போல ஈஸியா என்ன" என கலா மாஸ்டர் கூறி இருக்கிறார்.  


Advertisement

Advertisement