நானியின் திரைப்பயணத்தில் 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவர் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ள நெகிழ்ச்சியான பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நானி. கதாநாயகனாக மட்டுமல்லாமல், தயாரிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இயல்பான நடிப்பு, வித்தியாசமான கதைத்தேர்வு என தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் நானிக்கு தெலுங்கு மட்டுமின்றி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில், திரைத்துறையில் தனது 18 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்துள்ளதை நானி ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “திரைத்துறையில் இன்றுடன் 18 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இப்போது சினிமாவில் ஒரு இளைஞராகவே ஆகிவிட்டேன். எப்போதும் உங்களின் அன்பை நான் சாதாரணமாக எடுத்துக் கொண்டதில்லை. அப்படி இருக்கவும் மாட்டேன்!” என தெரிவித்துள்ளார்.
18 ஆண்டுகளாக தன்னை தொடர்ந்து ஆதரித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நானியின் இந்த பதிவு அமைந்துள்ளது. வெற்றிகள், தோல்விகள் என பல்வேறு கட்டங்களை கடந்து வந்தாலும் ரசிகர்களின் அன்பே தன்னை தொடர்ந்து பயணிக்க வைப்பதாக அவர் வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. நானியின் இந்த உருக்கமான பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Listen News!