• Jan 19 2025

தனுஷ் இயக்கவுள்ள அடுத்த படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? தேசிய விருது கன்ஃபார்ம்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது தனுஷ்க்கு என்றே தனி இடம் காணப்படுகின்றது. இவர் சிறந்த நடிகராக, பாடல் ஆசிரியராக, இயக்குனராக, தயாரிப்பாளராக தொடர்ந்து வெற்றிகளை கொடுத்துக்கொண்டே வருகின்றார். இவர் இறுதியாக இயக்கி நடித்த ஐம்பதாவது படமான ராயன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

இதை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், குபேரா, பாரதிராஜாவின் பயோபிக் என கிட்டத்தட்ட ஆறு  படங்களை தனது கைவசம் வைத்துள்ளார்.  நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் இருந்து வெளியான கோல்டன் ஸ்பாரோ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து தனுஷ் தான் இயக்க உள்ள அடுத்த படத்தில் நித்தியா மேனனை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம். இந்த படம் இட்லி கடை நடத்தி தனது குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் ஒரு பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாம்.


ஆனாலும் இந்த படத்தில் தனுஷ் நடிக்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படம் நிச்சயம் பல விருதுகளை குவிக்கும் என தனுஷுக்கு நெருங்கிய வட்டாரங்களில் பேசப்படுகின்றது. தற்போது இந்த படத்திற்கு இட்லி கடை என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

திருச்சிற்றம்பலம் படத்தில் தனுசுடன் நித்யா மேனன் நடித்திருந்தார். அந்தப் படத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது. தனது எளிமையான நடிப்பினால் தேசிய விருது பெரும் அளவிற்கு நடிப்பில் மிரட்டி இருந்தார்.

இதேவேளை, இட்லி கடை தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement