• Jan 19 2025

இந்த வாரம் 7 படங்கள் ரிலீஸ் ஆகுதா? யார் யாருடைய படங்கள் தெரியுமா? லிஸ்ட் இதோ..

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை என்றாலே என்ன படம் ரிலீஸ் ஆகும்? எத்தனை படங்கள் ரிலீஸ் ஆகப்போகுது? என ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருப்பார்கள். அதன்படி இந்த வாரமும் ஏழு படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அவை பற்றி விரிவாக பார்ப்போம்.

ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள திரைப்படம் தான் 'கடைசி உலகப் போர்'. இந்த படத்தில் நாசர், அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனுஷ்காந்த், சிங்கம் புலி, நட்டி நட்ராஜ், அனகா உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி தான் இசையும் அமைத்துள்ளார். மேலும் இந்த படம் எதிர்வரும் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது.


'தோழர் சேகுவாரா' என்ற திரைப்படம் இருபதாம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் சத்தியராஜ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் இவருடன் மொட்டை ராஜேந்திரன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள். இந்த படத்தை அலெக்ஸ் இயக்கியுள்ளார்.


'லப்பர் பந்து' என்ற படமும் இந்த வாரம் வெளியாக உள்ளது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட இந்த படத்தை, அறிமுக இயக்குனரான தமிழரசன் பச்சமுத்து எழுதி  இயக்கியுள்ளார். இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், பால சரவணன், காலி வெங்கட் , கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.


சசிகுமார் நடித்திருக்கும் படம் தான் 'நந்தன்'. இந்த படத்தை சரவணன் இயக்கியுள்ளார். இதில் சமுத்திரகனி, ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர்கள் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள். இந்தப் படமும் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது.


சதீஷ் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் தான் 'சட்டம் என் கையில்'. வித்தியாசமான கதை அம்சத்தை கொண்ட இந்த படத்தில் சம்பத்தா. அஜய் ராஜ். வித்யா. பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ் செல்வி, பாவா செல்லதுரை, வெண்பா, ஜீவா, ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படமும் இருபதாம் தேதி வெளியாக உள்ளது.


சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான படம் தான் ' கோழிப்பண்ணை செல்லதுரை' .  இதில் ஏகன், ஜோகி பாபு,   பாவா செல்லதுரை, சத்திய தேவி, ஜெயசூர்யா, குட்டி புலி தினேஷ், மாஸ்வி கொட்டாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படம் ரிலீஸாகும் முன்பே சர்வதேச விருதை வென்றுள்ளது.

Advertisement

Advertisement