• Apr 30 2024

தளபதி 68 இந்த பாலிவூட் படத்தின் காப்பியா?- ட்ரெண்டாகும் சூப்பர் நியூஸ்

stella / 5 months ago

Advertisement

Listen News!

விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்திற்கு, தற்காலிகமாக தளபதி 68 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. லியோ ஷூட்டிங் முடியும் முன்பே தளபதி 68 படத்தின் டீம் அபிஸியலாக கன்ஃபார்ம் ஆகிவிட்டது. சில தினங்களுக்கு முன்னர் தளபதி 68 பூஜை வீடியோவும் வெளியானது.

 அதில், இந்தப் படத்தில் விஜய்யுடன் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் பற்றியும் அபிஸியலாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், சினேகா, மீனாட்சி செளத்ரி, யோகி பாபு, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் கமிட்டாகியுள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். தளபதி 68 முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.


தளபதி 68 முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது விஜய்யின் ஓபனிங் சாங் ஷூட் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து பாங்காங் சென்றது படக்குழு. லியோ சக்சஸ் மீட் முடிந்த உடனே விஜய்யும் பாங்காங் சென்று படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அங்கு ஹை ஆக்‌ஷன் சீக்வென்ஸான கார் சேஸிங் ஃபைட் சீன் ஷூட் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த ஃபைட் சீன் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளதாம்.

 இப்படம் டைம் ட்ராவல் கதைக்களத்தில் உருவாகிறது என ஏற்கனவே ஒரு தகவல் வெளிவந்தது. இதற்காக தான் லாஸ் அஞ்சலஸுக்கு சென்று விஜய்க்கு De Aging செய்துள்ளனர் என்கின்றனர்.இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், ஹாலிவுட்டில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த லூப்பர் படம் போன்ற கதைக்களம் தான் தளபதி 68 என கூறப்பட்டு வருகிறது. இது தான் இன்றைய நாளுடைய ஹாட் டாப்பிக்காக சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டு வருகிறது.   

Advertisement

Advertisement

Advertisement