• Aug 06 2025

தனுஷின் அடுத்த சம்பவம்.. சீக்கிரம் விடுவோமா? சூப்பர் அறிவிப்பு..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

தனுஷ் நடித்த ’ராயன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கி உள்ள நிலையில் தனுஷின் அடுத்த சம்பவம் விரைவில் ஆரம்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

தனுஷ் நடித்து இயக்கிய அவரது 50வது திரைப்படமான ’ராயன்’ கடந்த வெள்ளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனுஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.



இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ ஃபர்ஸ்ட் சிங்கள் பாடலை தனுஷ் பாடியுள்ளார் , சீக்கிரம் விடுவோமா’ என்று பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து தனுஷ் பாடிய ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ பாடல் விரைவில் வெளியாக இருப்பதாகவும் அடுத்த சம்பவம் ஆரம்பமாக இருப்பதாகவும் கமெண்ட் பதிவாகி வருகிறது.

தனுஷின் உறவினர் பவிஷ் ஹீரோவாக நடிக்கும் ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தில்  அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Advertisement

Advertisement