• Jan 18 2025

ஒரே படத்துடன் உலகளவில் பிரபலமான நடிகைக்கு இன்று பிறந்தநாள்!

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

'சீதா ராமம்' என்ற ஒற்றை திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானவர் நடிகை  மிருணால் தாக்கூர். தொலைக்காட்சி நாடகங்களில் நடித்து வந்த இவரின் திறமை மற்றும் உழைப்பே இந்த உயர்விற்கு காரணம் என்று சொன்னால் அதில் மாற்றுக்கருத்து  ஏதும் இருக்கப்போவதில்லை.


'சீதா ராமம்' படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்தியாவின் அனைத்து மொழி படங்களிலும் நடிப்பதற்கு  அழைக்கப்படும் மிருணால் தாக்கூர் தற்போது செம பிஸியாக நடித்து வருகிறார்.அண்மையில் வெளியான பான் இந்திய திரைப்படமான 'கல்கியில்' சிறப்பு தோற்றத்தில் தோன்றியிருப்பர் மிருணால் தாக்கூர்.

Mrunal Thakur talks about her cameo in Kalki 2898 AD | Filmfare.com

இந்நிலையில் இன்றைய தினம் தனது பிறந்த தினத்தை கொண்டாடும் மிருணால் தாக்கூருக்கு திரைத்துறை மற்றும் ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தவாறுள்ளது.இவ்வாறிருக்க மிருணால் தாக்கூருக்கு பிறந்த தின வாழ்த்தினை சிறப்பு போஸ்டர் மூலம் தெரிவித்திருக்கிறது முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ்.

படம்

லைக்கா தனது உத்தியோக பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பர்த்டே போஸ்டருடன் "அழகான நடிகை மிருணால் தாக்கூர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த ஆண்டு வெற்றி மற்றும் பிளாக்பஸ்டர் தருணங்களால் நிரப்பப்படட்டும். உங்கள் மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சிகளால் இதயங்களைத் திருடிக்கொண்டே இருங்கள்!" என்ற வாழ்த்து செய்தியையும் பகிர்ந்துள்ளது.


Advertisement

Advertisement