• Jan 19 2025

செல்ஃபி எடுக்க வந்த ரசிகரை தள்ளிவிட்டு சென்ற சிரஞ்சீவி! தீயாய் பரவும் வீடியோ

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி விமான நிலையத்தில் சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். அதாவது தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற ரசிகரை தள்ளிவிட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதாவது சிரஞ்சீவியும் அவரது மனைவியும் விமான நிலையத்தில் உள்ள லிப்டிலிருந்து வெளியேறுவதைக் கண்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியர் ஒருவர், அவருடன் செல்ஃபி எடுக்க அருகில் சென்றுள்ளார். ஆனால் சிரஞ்சீவி அதை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக செல்கின்றார்.

எனினும் அந்த நபர் பிடிவாதமாக சிரஞ்சீவியை பின்தொடர்ந்து சென்று செல்பி எடுக்க முயல, சிரஞ்சீவி அந்த ரசிகரின் முதுகில் கை வைத்து தடுத்து தூர தள்ளிவிட்டு தனது வழியில் நடந்து செல்கின்றார். இந்த வீடியோ தற்போது வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.


பலர் சிரஞ்சீவியின் இந்த செயலுக்கு கடுமையாக விமர்சித்துள்ளனர். சிலர் மட்டும் சிரஞ்சீவிக்காக விளக்கம் கொடுத்து வருகின்றார்கள்.

சிரஞ்சீவி தனது விஸ்வம்பராவின் வெளியிட்டு தயாராகி வருகின்றார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக திரிஷா நடிக்கின்றார்.


Advertisement

Advertisement