தரியார் பேருந்து ஓட்டுநர் ஒதுங்குவதற்கு கூட வழி இல்லாத சாலையில் அதிக ஹாரன் எழுப்பி வந்ததால் இயக்குனர் சேரன் வண்டியை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் நடிகர் சேரன் மீது தனியார் பேருந்து தொழிலாளர்களின் தலைவர் புகார் அளித்துள்ளார்.
புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்த இயக்குனர் சேரன் தன்னுடைய காரில் பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது நெடு நேரமாக அதிக அளவில் ஒலி எழுப்பியவாறு ஒரு தனியார் பேருந்து வந்துள்ளது. அந்த பேருந்துக்கு வழிவிட இடம் இல்லாத பகுதியில் சேரனின் காரும் வந்து கொண்டிருந்து. இடை விடாமல் ஒலி ஏழுப்ப பட்டதை அடுத்து அங்கு தனது காரை நடுரோட்டில் நிறுத்திய சேரன் அந்த பேருந்து ஓட்டுனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஒதுங்குவதற்கு கூட வழி இல்லாத சாலையில் அதிக ஹாரன் எழுப்பி எதற்கு மக்களுக்கு இடையூறு செய்கிறீர்கள் எப்படி ஒதுங்கி உங்களுக்கு வழிதர முடியும் என கேள்வி எழுப்பினர். இந்த பேச்சு ஒரு கட்டத்தில் வாக்குவாதம் ஆகவே அந்த பகுதியில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் பொதுமக்கள் மற்றும் மற்ற பேருந்தில் வந்த பேருந்து நடத்துனர்கள் இறங்கி சேரனை சமாதானம் செய்து அவரை காரில் ஏற்றி வழி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் இந்த விடீயோக்களும் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தற்போது தனியார் பேருந்து ஓட்டுனர் " காரில் இருப்பது போலத்தான் பேருந்திலும் எலக்ரிக் ஹாரன் தான் இருக்கிறது. ஒரு பொதுவான ஒருவர் இப்படி ரோடில் வாகனங்கள் வரும் போது நிறுத்தி வாகனங்களுக்கு இடையூறு செய்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் நடிகர் சேரன் மீது ஏன் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை? என் புகாரளித்துள்ளார்.
Listen News!