• Sep 14 2024

நாக சைதன்யா VS துருவ் விக்ரம்... ஸ்டார் புதல்வர்களின் புதிய movie அப்டேட் இதோ...

subiththira / 4 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் துருவ் விக்ரம் "ஆதித்ய வர்மா" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மகான் படத்தில் விக்ரம் உடன் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றார். இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்திருந்தனர்.


நடிகர் துருவ் விக்ரம் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் பைசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. 


இந்த நிலையில் துருவ் விக்ரம் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் கார்த்திக் வர்மா தண்டு உடன் கூட்டணி வைத்துள்ளாராம். இப்படம் இரண்டு முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நாக சைதன்யா மற்றும் துருவ் விக்ரம் நடிக்க உள்ளனர் எனவும், மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியானது. இது தொடர்பான மேலதிக விபரங்கள் இனிவரும் காலங்களில் வெளியாகும்.   

Advertisement

Advertisement