• Jan 18 2025

அஜித்துடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் பிரபல நடிகர் !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

எஸ்.ஜே சூர்யா இன்று தமிழ் திரையுலகில் 'நடிப்பு அரக்கன்' எனும் பட்டத்துடன் முன்னணி நடிகராக வலம் வருகிறார். ஆனால் தமிழ் திரையுலகில் அவருக்கான முதல் வாய்ப்பை கொடுத்தது அஜித்தின் 'வாலி' திரைப்படம் தான். இன்றைய நேர்காணல்களில் கூட மறக்காது அஜித்திற்கு நன்றி கூறுவார் எஸ்.ஜே.சூர்யா.


அன்றைய நாளில் 250 நாட்கள் கடந்து ஓடிய 'வாலி' திரைப்படம் இயக்குனரான எஸ்.ஜே.சூர்யாவிற்கு பெரும் வரவேற்பை கொடுத்தது.தொடர்ந்து தமிழ் திரையுலகில் இயக்குனராகவும் நடிகராவும் ஜொலிக்கும் எஸ்.ஜே.சூர்யா இன்றைய இளைஞர்கள் பெரிதும் விரும்பும் ஓர் நடிகராக வலம் வருகிறார்.அது ஹீரோவோ வில்லனோ தனது மொத்த உழைப்பையும் கொடுத்து பாத்திரத்திற்கு ஓர் உயிரோட்டத்தையே கொடுத்து விடுகிறார் எஸ்.ஜே.சூர்யா.

படம்

இந்நிலையில் தன்னை வளர்த்து விட்ட அஜித்தை என்றும் மறவாத எஸ்.ஜே.சூர்யாவிற்கு அஜித்தின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.அஜித் தற்போது நடித்து வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித்துடன் நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா தற்போது படப்பிடிப்பில் அஜித்துடன் தான் இருக்கும் புகைப்படமொன்றை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளதுடன் "பல வருடங்களுக்குப் பிறகு எனது வழிகாட்டியான அஜித்  தி கிரேட் உடன் மகிழ்ச்சியான தருணம்" என பதிவினையும் இட்டுள்ளார்.


Advertisement

Advertisement