சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பூர்ணிமா ரவி ஆரம்பத்தில் யூடியூப் மூலம் காமெடி வீடியோக்களை வெளியிட்டு இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். இவருடைய யூடியூப் சேனலை பல்லாயிரக்கணக்கானோர் பின் தொடர்ந்து வந்தார்கள்.
அதன் பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் பங்கு பற்றி பட்டித்தொட்டி எங்கும் பேமஸானார். அதில் இவரும் சகப் போட்டியாளரான மாயாவும் செய்த ரகளைகள் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பேசப்படுகிறது. அதேபோல பிக்பாஸ் வீட்டில் இவர்களுடைய நட்பும் பலராலும் பாராட்டப்பட்டது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்பு பூர்ணிமாவுக்கு ஒரு சில பல வாய்ப்புகள் கிடைத்தன. அதில் கதாநாயகியாகவும் நடித்து ஒரு சில படங்களில் கலக்கியிருந்தார். அதன்படி நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி படத்தில் அவருக்கு தோழியாக நடித்திருந்தார்.
மேலும் செவப்பி என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதில் பூர்ணிமாவின் நடிப்பும் பெரிதளவில் பாராட்டப்பட்டது.
இந்த நிலையில், பூர்ணிமா ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தாறுமாறாக தமது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்,
Listen News!