தமிழ் சினிமாவின் முன்னணியில் நடிகர்களுள் ஒருவராக சிவகார்த்திகேயன் தற்போது இடம் பிடித்துள்ளார். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான அமரன் திரைப்படம் சுமார் 350 கோடிகள் வரை வசூலித்து மிகப்பெரிய சாதனை படைத்தது. இது சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரிலும் மிகப்பெரிய திருப்புமுனையாக காணப்படுகின்றது.
இதை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் தனது 23, 24 மற்றும் 25வது படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். அதில் சமீபத்தில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் டைட்டில் மதராஸி என வெளியிடப்பட்டது. இந்த டைட்டில் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதேபோல சுதா கொங்கார இயக்கத்தில் 25வது படத்தில் நடித்து வருகின்றார் சிவகார்த்திகேயன். இந்த படத்திற்கு பராசக்தி என டைட்டில் இடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஸ்ரீலிலா, அதர்வா, ஜெயம் ரவி என முன்னணி நடிகர்கள் நடித்து வருவதால் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் காணப்படுகிறது.
சமீபத்தில் அமரன் படத்தில் நூறாவது நாள் வெற்றி விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் பேசிய சிவகார்த்திகேயன் பலருக்கும் நன்றி சொன்னதோடு கமலஹாசன் பற்றியும் கமலஹாசரின் ராஜ்கமல் நிறுவனம் பற்றியும் பெருமையாக பேசியிருந்தார்.
இந்த நிலையில், சமூக வலைத்தள பக்கங்களில் அமரன் படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயன் எடுத்த ரிஸ்க் தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் ஜிம்முக்கு சென்று தனது பாடியை ட்ரான்ஸ்பர்மேஷன் செய்த வீடியோ தற்போது இணையவாசிகளிடையே வைரலாகி வருகின்றது. இதோ அந்த வீடியோ..,
SK’s Physical Transformation 👏
pic.twitter.com/UCY6B9g3vL
Listen News!