• Jan 19 2025

உன்ட நடிப்பு எல்லாம் முடிஞ்சா? வாசலில் ஆர்த்தி எடுத்த ஈஸ்வரி! பாக்கியாவை கிழித்த ராமமூர்த்தி! இனியா வைத்த ட்விஸ்ட்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அதில் செழியன், கோபி, ராதிகா, ஆகிய மூவரும் இருந்து கதைத்துக் கொண்டிருக்க, ஜெனி விஷயத்தில் பாக்கியா செய்தது தப்பு என கோபி சொல்ல, இல்ல ஜெனி விஷயத்தில் பாக்யா செய்தது தான் சரி. இல்லாட்டி ரொம்ப பிரச்சினையாகி இருக்கும். ஆனா ராஜி  கல்யாண விஷயத்தில் பாக்கியா செய்தது ரொம்ப பெரிய தப்பு என்பது போல ராதிகா சொல்லிச் செல்கிறார்.

இதை அடுத்து பாக்கியா வீட்டுக்கு வர, வீட்டு வாசலில் வைத்தே ஈஸ்வரி கொஞ்சம் பொறு, நீ பெரிய காரியமெல்லாம் பண்ணிட்டு  வந்திருக்க உனக்கு ஆராத்தி எடுத்து தான் உள்ள விடனும் அப்படி என்பது போல் சொல்கிறார்.


மேலும், எப்ப நீ இந்த வீட்டு வாசல்படியை தாண்டி சம்பாதிக்க தொடங்கினாயோ அப்ப இருந்தே நீ ரொம்ப மாறிட்டா.. முன்னம்  எல்லாம் நான் என் மருமகளை பத்தி பெருமையா எல்லார்கிட்டையும் பேசுவன். ஆனா இப்போ நீ அப்படி இல்லை என்று சரமாரியாக பாக்கியாவை திட்டுகிறார்.

அத்துடன் பாக்கியாகவும் சப்போர்ட் பண்ணும் பாக்யாவின் மாமாவும், நீ செஞ்சது தப்பு தான் என்பது போல பாக்கியாவுக்கு  எதிராக பேசுகிறார்.

இதை அடுத்து எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க நான் செஞ்சது தப்புதான் சாரி.. சாரி.. இனி இப்படி பண்ணவே மாட்டேன் என சொல்லி வீட்டுக்குள் செல்கிறார்.

அங்கு இனியா மட்டும், அம்மா நீ செஞ்சது சூப்பர். நான் என் பிரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் சொல்லி சந்தோஷப்பட்டேன் என்று பாக்கியாவிடம் சொல்லி சந்தோஷப்படுகிறார்.

அதற்கு பாக்கியா, அந்த நேரத்தில் அங்க சிட்டுவேஷன் அப்படி இருந்துச்சு.. அதனால தான் அப்படி ராஜுக்கு கல்யாணம் பண்ணி வச்சேன். ஆனா நீ அதுக்காக எதுவும் தப்பா பண்ண கூடாது என அவருக்கு அட்வைஸ் செய்து விட்டு செல்கிறார்.

அதற்கு பிறகு எழிலும், உனக்கு யாரையும் பிடிச்சு இருந்தா தைரியமா சொல்லு. ஆனா அதுக்கு நீ செட்டில் ஆகி இருக்கனும். அவனும் செட்டில் ஆகி இருக்கணும் என்பது போல இனியாவுக்கு எழில் சொல்கிறார்.

Advertisement

Advertisement