• Jan 19 2025

எல்லாருக்கும் உண்மையை சொல்லப்போவதாக கோமதியை மிரட்டும் மீனா!! விபரீத பேச்சில் பாண்டியன்?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர் 2. இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அதில் வெளியே சென்ற பாண்டியனை இன்னும் காணவில்லை என பதற்றத்தில் இருக்கிறார் கோமதி. அவரை சமாதானப்படுத்த மீனா முயற்சித்த போதும் அவர் ரொம்பவும் பதட்டமாக பேசுகிறார். இறுதியில் பொறுமையிழந்த மீனா, நான் போய் உண்மையை சொல்லவா? என கேட்டு  கோமதியை திட்டுகிறார்.

இதைப் பார்த்த மீனாவின் புருஷன், மீனாவை தனியாக அழைத்துக் கொண்டு போய், நீ ஏன் அம்மாவுக்கு  பேசுற,  நீ கோவிலுக்கு போயிட்டு வந்ததிலிருந்து ரொம்ப மாறிட்டா, அப்படி என்ன நடந்துச்சு என கேட்க, அது மாமியார் மருமகள் பிரச்சனை அதுல நீங்க தலையிடாதீங்க என்று சொல்லி மீனா சமாளிக்கிறார்.


அதற்குப் பிறகு பாண்டியன் இருக்கும் இடம் கோமதிக்கு தெரிய வர, இப்போ மாமா இருக்கிற இடம் தெரியும் தானே இப்ப சரி வாங்க எல்லாரும் சாப்பிடுவோம் என எல்லாரையும் அழைக்கிறார் மீனா.

இன்னொரு பக்கம், நடந்தவற்றை நினைத்து கடையில் அழுது கொண்டு இருக்கும் பாண்டியன் தனது மகன் சரவணனிடம் ரொம்பவும் நொந்து பேசுகிறார். 

உங்களையெல்லாம் நல்லா தானே வளர்த்தேன். உங்களுக்காக தான் கஷ்டப்பட்டன்,என்னை யாருமே ஊர்ல மதிக்காமல் இருந்ததில்லை அப்படி கெத்தா வாழ்ந்தனான். ஆனா இப்போ எல்லாம் போச்சு. ரொம்ப அசிங்கப்பட்டன். நான் நல்ல அப்பா இல்லை, நான் கேவலமான அப்பாவா? அப்படி என்று புலம்புகிறார்.

இவ்வாறு மனமுடைந்து கவலையாக பேசிய பாண்டியனுக்கு சரவணன் தன்னால் முடிந்த ஆறுதலை சொல்கிறார் இதுதான் இன்றைய எபிசோட்


Advertisement

Advertisement