• Feb 23 2025

2 ஆயிரம் ரூபாய் தான் சம்பளம்.. வாட்டி எடுத்தாங்க.. ஏண்டா சினிமாவுக்கு வந்தேன்னு ஆயிருச்சு: ‘எதிர்நீச்சல்’ கனிகா

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!


சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி என்ற கேரக்டரில் நடித்து வரும் நடிகை கனிகா தான் ஆரம்பத்தில் பார்த்த வேலைக்கு வெறும் 2000 ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கியதாகவும், அதன் பின் சினிமாத்துறைக்கு வந்த போது தன்னால் சரியாக நடனம் ஆட முடியாததால் ஏண்டா இந்த துறைக்கு வந்தோம் என்று வெறுப்பாக இருந்ததாகவும், சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
 
நடிகை கனிகா கடந்த 2012 ஆம் ஆண்டு ’பைவ் ஸ்டார்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு ’ஆட்டோகிராப்’ ’வரலாறு’ ’ஓ காதல் கண்மணி’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது ’எதிர்நீச்சல் ’ சீரீயலில் ஈஸ்வரி என்ற கேரக்டரில் நடித்து வரும் அவருக்கு ஏராளமான புதிய ரசிகைகள் கிடைத்துள்ளனர் என்பதும் அதனால் அவர் இந்த சீரியலில் உற்சாகத்துடன் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை கனிகா தான் சினிமாவுக்கு வரும் முன் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்ததாகவும் அந்த நிறுவனத்தில் வெறும் 2000 மட்டுமே சம்பளம் கொடுத்ததாகவும் ஆனால் சுமார் 10 மணி நேரம் தன்னிடம் வேலை வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு சில விளம்பர படங்களில் நடித்த பிறகு தனது சினிமா வாய்ப்பு கிடைத்தது என்றும், மலையாள படங்களில் நடித்த போது தான் மிகவும் கஷ்டப்பட்டதாகவும் குறிப்பாக ஒரு படத்தில் ஷோபனா போல் டான்ஸ் ஆட வேண்டும் என்று இயக்குனர் கூறியதை அடுத்து நான் டான்ஸ் ஆட முடியாமல் திணறினேன் என்றும் அப்போதெல்லாம் ஏண்டா சினிமாவுக்கு வந்தேன் என்ற வெறுப்பு ஏற்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் போக போக சினிமாவில் உள்ள நெளிவு சுளிவுகளை கண்டு கொண்டு பல பட வாய்ப்புகளை பெற்றதாகவும் தற்போது சீரியலில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement