அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் புதிய அப்டேட் தற்பொழுது வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தின் ‘கல்லா நிக்கிறியே’ பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர்களில் அசோக் செல்வனும் ஒருவர். ‘சூதுகவ்வும்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், ‘நித்தம் ஒரு வானம்’, ‘ஹாஸ்டல்’, ‘மன்மத லீலை’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘போர் தொழில்’, ‘ப்ளூ ஸ்டார்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ‘போர் தொழில்’ திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

இந்நிலையில், அசோக் செல்வனின் 23-வது படமாக ‘அன்பில் அவன்’ உருவாகியுள்ளது. இப்படத்தில் ப்ரீத்தி முகுந்தன் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘போர் தொழில்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதையை எழுதியுள்ள நிலையில், அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் படத்தை இயக்கியுள்ளார்.
ஹேப்பி ஹை பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளுக்கு பீட்டர் ஹெயின் பணியாற்றியுள்ளார். காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த படமாக உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ வரும் செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையே நாளை வெளியாகும் ‘கல்லா நிக்கிறியே’ பாடல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Some roads lead home. Some lead back to each other ❤️
Kalla Nikkuriye, second single from #AnbilAvan drops tomorrow.
A Govind Vasantha Musical.
Sung by @sidsriram 🎙️
In theatres on September 25, 2026.
Starring @AshokSelvan @PreityMukundan.
Directed by @Karti6Kane.… pic.twitter.com/Sl9aGKuHm7
Listen News!