• Sep 10 2026

ரவி மோகன் பிறந்தநாளில் லீக்கான வேற லெவல் ட்ரீட்.. குஷியில் ரசிகர்கள்.!

shali / 54 minutes ago

Advertisement

Listen News!

ரவி மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் இயக்கி வரும் ‘An Ordinary Man’ திரைப்படக்குழு வெளியிட்டுள்ள சிறப்பு போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகராக பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள ரவி மோகன், தற்போது இயக்குநராகவும் புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். அந்த வகையில், அவர் இயக்கும் முதல் திரைப்படமாக ‘An Ordinary Man’ உருவாகி வருகிறது. இப்படத்தின் மூலம் ரவி மோகன் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


இந்நிலையில், ரவி மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘An Ordinary Man’ படக்குழு சார்பில் சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், இப்படத்தின் ‘Higher’ ப்ரொமோ பாடல் இன்று மாலை 5.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, ரவி மோகன் இயக்கும் இப்படத்தில் நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இப்படத்தை ரவி மோகனே தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ‘An Ordinary Man’ திரைப்படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement

Advertisement