• Jan 19 2025

தனுஷ் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா! மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து அவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை.

சிறப்பாக சென்று கொண்டிருந்த ஐஸ்வர்யா, தனுஷ் திருமண வாழ்க்கையில், திடீரென ஏற்பட்ட பூகம்பத்தினால் இருவரும் பிரிந்து வாழ்கின்றார்கள். எனினும் அவர்கள் இதுவரையில் விவாகரத்து பெறவில்லை.

3 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான  ஐஸ்வர்யாவுக்கு, அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றுக் கொடுத்தாலும், அந்த படம் பலரையும் கவர்ந்திருந்தது. தொடர்ந்து வை ராஜா வை படத்தை இயற்றியிருந்தார். எனினும் அது தோல்வி அடைந்தது.

இதைத்தொடர்ந்து ரஜினிகாந்தை கெஸ்ட் ரோலிலும், விஷ்ணு விஷால், விக்ராந்தை லீடு ரோலிலும் வைத்து லால் சலாம் படத்தை இயக்கியிருந்தார் ஐஸ்வர்யா.


லால் சலாம் படமானது கடந்த ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, சுமாரான வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினி காந்த் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி  தற்போது ட்ரெண்டாகியுள்ளது. அதன்படி அவர் கூறுகையில்,

கடந்த இரண்டு வருடங்களாக தனிமை தான் என்னை ஆட்கொண்டுள்ளது. ஆனாலும் தனிமை எனக்கு ரொம்ப பிடிக்கும். உண்மையில் இந்த இரண்டு வருடங்களில் நான் என்னை உணர்ந்தேன். ஏனென்றால் தனியாக இருப்பவர்கள் தான் பாதுகாப்பான மனிதர்கள்.


நிறைய பேர் என்னிடம் கேட்பார்கள். எனக்கு போர் அடித்தால் என்ன செய்வேன் என்று.. ஆனால் அந்த உணர்வை நான் எப்போதும் உணர்ந்ததே இல்லை.. எனக்கு தனியாக இருப்பது சௌகரியமான  ஒன்று.

வை ராஜா வை திரைப்படத்திற்கு பிறகு நான் பிரேக் எடுத்தது என்னுடைய குழந்தைகளுக்காகத்தான். உலகம் வேகமாக போய்க் கொண்டிருக்க, ஒருவர் தனியாக வாழ்க்கை பார்த்துக் கொள்ளும் சூழ்நிலை மிகவும் எளிதாக தற்போது கிடைக்கிறது. 


என்னுடைய குழந்தைகள் வளரும் காலத்தை நான் மிஸ் செய்திட கூடாது என்று யோசித்தேன். அதனால் தான் நீண்ட இடைவெளி  எடுத்துக் கொண்டேன் என்றார்.

அதே வேலை தனுஷையும் ஐஸ்வர்யாவும் மீண்டும் சேர்த்து வைப்பதற்கு இரு வீட்டாரும் முயற்சி செய்து வருகிறார்கள்.

ஆனால், ஐஸ்வர்யா தனியாக இருப்பதுதான் பாதுகாப்பான நிலை, தனுசுடன் மீண்டும் இணைந்து வாழவே முடியாது என்பதை மறைமுகமாக அவர் சொல்லி உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement