• Feb 23 2025

யாழ் மக்களே நீங்க செஞ்ச எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி! சற்றுமுன் கலா மாஸ்டர் வெளியிட்ட வீடியோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய பிரபல பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி யாழில் ஏற்பட்ட குழப்பத்தால் பலமுறை இடைநிறுத்தப்பட்டு இறுதியில் குறுகிய நேரத்திற்குள் நிறைவடைந்தது. விழா ஏற்பாட்டாளர்களின் ஒழுங்குபடுத்தலில் ஏற்பட்ட தவறுகளே இந்த நிகழ்வு இடைநிறுத்தப்படுவதற்கான காரணமாக கூறப்படுகின்றது.


இதில் கலந்து கொள்வதற்காக  ரம்பா, யோகி பாபு, பாலா,சாண்டி மாஸ்டர், புகழ், தமன்னா,  சஞ்சீவ், திவ்யதர்ஷினி, ஆலியா மானசா, நந்தினி, மகாலட்சுமி, கலா மாஸ்டர் உள்ளிட்ட தென்னிந்திய நட்சத்திரங்களும் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தனர். 


இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த கலா மாஸ்டர் நிகழ்ச்சி நிறைவு பெற்ற சந்தோசத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். தனது நடன குழுவினருடன் இருந்து அனைவருக்கும் நன்றி எல்லாரும் சேர்ந்து உங்கள் ஒத்துழைப்பை வழங்கி இருந்திங்க, வந்து இருந்த ரசிகர்களுக்கும் நன்றி என்ற தெரிவித்து தனது இன்ஸராகிராம் பக்கத்தில் வீடியோ ஷேர் செய்துள்ளார்.   


Advertisement

Advertisement