• Mar 25 2026

யாழில் யோகி பாபு செய்த காரியம்? உயிரை பணயம் வைத்து கூடவே சென்ற கலா மாஸ்டர்! தீயாய் பரவும் வீடியோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய பிரபல பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி யாழில் ஏற்பட்ட குழப்பத்தால் பலமுறை இடைநிறுத்தப்பட்டு இறுதியில் குறுகிய நேரத்திற்குள் நிறைவடைந்தது.

விழா ஏற்பாட்டாளர்களின் ஒழுங்குபடுத்தலில் ஏற்பட்ட தவறுகளே இந்த நிகழ்வு இடைநிறுத்தப்படுவதற்கான காரணமாக கூறப்படுகின்றது.

இதில் கலந்து கொள்வதற்காக  ரம்பா, யோகி பாபு, பாலா,சாண்டி மாஸ்டர், புகழ், தமன்னா,  சஞ்சீவ், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்யதர்ஷினி, ஆலியா மானசா, நந்தினி, மகாலட்சுமி, கலா மாஸ்டர் உள்ளிட்ட தென்னிந்திய நட்சத்திரங்களும் யாழ்ப்பாணத்தை சென்றடைந்தனர்.


குறித்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கலா மாஸ்டர், குஷ்பு ஆகியோர் யாழிற்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஆரம்ப முதலே இதற்கு எதிர்ப்பு காட்டப்பட்டு வந்தது.

இதை தொடர்ந்து குறித்த நிகழ்ச்சிக்கு குஷ்பு பங்கேற்காத நிலையில், கலா மாஸ்டர் மட்டும் இந்த நிகழ்ச்சிகான ஏற்பாட்டை கவனித்து வந்தார்.


இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலுக்கு கலா மாஸ்டர், யோகி  பாபு உட்பட்ட சில பிரபலங்கள் பயணம் செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் கலா மாஸ்டர்.

அதன்படி அவர் வெளியிட்ட வீடியோவில், யோகி பாபு அந்த படகை ஓட்டி சென்றதோடு, கலா மாஸ்டரும் குறித்த கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வந்துள்ளார்கள்.


Advertisement

Advertisement