• Oct 01 2026

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்.. ‘சேயோன்’ படத்தின் முக்கிய கட்டம் நிறைவு!

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

‘அமரன்’ திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படம் தான் ‘சேயோன்’. ‘தாய் கிழவி’ படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்கி வருகிறார். தமிழ்க்கடவுள் முருகனை மையமாக வைத்து கதை உருவாகியுள்ளதால் இப்படத்திற்கு ‘சேயோன்’ என பெயரிடப்பட்டுள்ளது.


மதுரை மண்ணின் பாரம்பரியத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், முழுக்க முழுக்க கிராமத்து கமர்சியல் எண்டர்டெய்னராக உருவாகி வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸே, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

கடந்த ஜூன் மாதம் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பிரமாண்ட செட்கள் அமைத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் முக்கிய ஆக்ஷன் மற்றும் குடும்பக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மேலும், இயக்குநரும் நடிகருமான சீமான் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதால், படத்தின் அடுத்தகட்ட பணிகள் வேகமெடுக்க உள்ளன. ‘சேயோன்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement