• Oct 01 2026

பாலிவுட்டில் கலக்கிய வித்யா பாலன்.. தமிழில் இப்படியொரு என்ட்ரியா? லீக்கான அப்டேட்.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஆர். பால்கி இயக்கவுள்ள புதிய தமிழ் திரைப்படம் குறித்த அறிவிப்பு தற்போது திரையுலகில் கவனம் பெற்றுள்ளது. வித்தியாசமான கதைக்களங்களை மையமாகக் கொண்டு திரைப்படங்களை உருவாக்கி வரும் ஆர். பால்கி, அடுத்ததாக தமிழில் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

ஆர். பால்கி மற்றும் வித்யா பாலன் கூட்டணி ஏற்கனவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஒன்று. கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ‘பா’ திரைப்படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றினர். இதனைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு வெளியான ‘ஷமிதாப்’ படத்திலும் இந்த கூட்டணி தொடர்ந்தது. இந்நிலையில், சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர். பால்கி – வித்யா பாலன் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மேலும், இப்படத்தின் மற்றொரு முக்கிய சிறப்பம்சமாக இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆர். பால்கியின் தனித்துவமான திரைக்கதை மற்றும் இயக்கத்துடன், இளையராஜாவின் இசையும் இணைவது படத்திற்கு கூடுதல் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் வித்யா பாலன் நடிக்கவுள்ள முக்கியமான படமாக இது அமையும் என கூறப்படும் நிலையில், படத்தின் கதைக்களம், மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement