• Oct 01 2026

‘டோரதி’ படத்தைப் பார்த்து எஸ்க்க்ளுசிவ்வான சூர்யா.! வைரலான பதிவு

shali / 58 minutes ago

Advertisement

Listen News!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 10வது திரைப்படமாக ‘டோரதி’ வெளியாகி, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இப்படத்தில் கீர்த்தி, சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சாதியக் கட்டமைப்பு மற்றும் ஆணாதிக்கச் சமூகத்தின் தாக்கத்தால் மாறுபட்ட பாலினத்தவர்களின் அடையாளம் எவ்வாறு நசுக்கப்படுகிறது என்பதை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு, பேசப்பட வேண்டிய ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினையை துணிச்சலாகவும் எதார்த்தமாகவும் பதிவு செய்திருப்பதாக படக்குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் நடிகர் சூர்யாவும் ‘டோரதி’ திரைப்படத்தை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “டோரதி பேசாப் பொருளைப் பேசத் துணிந்திருக்கிறார்கள். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சொல்ல வேண்டியதைத் திறம்படச் சொல்லியிருக்கிறார். கீர்த்தி, சனந்த், ரிஷிகாந்த் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு உயிர் சேர்க்கிறது.

இசைஞானி இளையராஜா அவர்களின் இசை மனதை நெகிழ வைக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் இந்த பாராட்டு தற்போது ‘டோரதி’ படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூகத்தால் ஒதுக்கப்படும் குரல்களை மையப்படுத்திய இப்படத்திற்கு முன்னணி நடிகரிடமிருந்து கிடைத்துள்ள இந்த பாராட்டு, படத்தின் மீதான கவனத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement